யாழ் பல்கலைகழக வேந்தராகப் பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல் நியமனம்

யாழ். பல்கலைகழக வேந்தராகப் பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான எழுத்து மூல கடிதம் ஒகஸ்ட் 27 ஆம் திகதியிடப்பட்டு ஜனாதிபதி செயலாளரால் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தப் பதவியை அவர் வகிக்கவுள்ளார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1966 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை பயின்ற குமாரவடிவேல் பௌதீக துறையில் முதல் தர சிறப்புப் பட்டம் பெற்றவர்.
பிரிஸ்டல் பல்கலைகழகத்தில் 1975 இல் கலாநிதிப் பட்டம் பெற்ற அவர் 1976 முதல் யாழ் பல்கலைகழகத்தில் பணியாற்றியள்ளார்.
2006-2007 ஆம் ஆண்டுகளில் மிக நெருக்கடியான காலக்கட்டத்தில் யாழ் பல்கலைக்கழக பதில் துணைவேந்தராகப் பொறுப்பெடுத்து சிறப்பு பணியாற்றியிருந்தார்.
2015 முதல் 2020 வரை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினராகவும் அவர் பணி புரிந்தார்.
Professor Rajaratnam Kumaravadivel appointed as Chancellor of the University of Jaffna