பிரதமர் மோடிக்கு குவைத்தில் வரவேற்பு

பிரதமர் மோடிக்கு குவைத்தில் வரவேற்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குவைத்திற்கு 2 நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

குவைத் சென்றடைந்த பிரதமர் மோடியை, அந்நாட்டு விமான நிலையத்தில் துணை பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரான ஷேக் பகத் யூசப் சவுத் அல்-சபா மற்றும் பலர் வரவேற்றனர்.

இந்தியா மற்றும் குவைத் இடையே பல்வேறு பிரிவுகளில் நட்புறவை வலுப்படுத்தும் வகையில், குவைத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1981 ஆம் ஆண்டு இறுதியாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குவைத்துக்கு பயணம் மேற்கொண்டார். அவருக்குப் பின்னர் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த பயணத்தில், இராணுவம் மற்றும் பாதுகாப்பில் ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share This