நத்தார் பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி
இந்தியாவின் புதுடில்லியில் நாளை திங்கட்கிழமை நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.
இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் புதுடில்லியில் உள்ள சிபிசிஐ மையத்தில் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டில் நடைபெறவுள்ளதாக
இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
பிஷப்கள் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் முக்கிய தலைவர்கள் உட்பட கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகத்தில் இவ்வாறான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்வது இதுவே முதன் முறையாகும்.
நாடாளாவிய ரீதியில் அனைத்து கத்தோலிக்கர்களுடனும் பணியாற்றும் இந்த அமைப்பு இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு 1944 இல் நிறுவப்பட்டது.