பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியா பயணமானார்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவுக்கு பயணமாகியுள்ளார்
பிரதமர் இன்று (16) அதிகாலை 12.40க்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-191 மூலம் புதுடெல்லிக்கு புறப்பட்டுச் சென்றதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, எதிர்வரும் 18ஆம் திகதி வரை பிரதமர் இந்தியாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-இந்த விஜயத்தின் போது, பிரதமர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனும், நாட்டின் உயர்மட்டத் தலைவர்களுடனும் கலந்துரையாட உள்ளார்.