சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு – பிரதமர் கவலை

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு – பிரதமர் கவலை

பாடசாலை குழந்தைகள் எதிர்கொள்ளும் துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இந்நிலையில், பாடசாலை குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர அனுமதிக்கப்படக்கூடாது எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்

கொழும்பு மாவட்டத்தில் உள்ள அதிபர்களுடன் கல்வி அமைச்சில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

இதற்கிடையில், இந்த ஆண்டு ஏப்ரல் 30ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 2,231 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This