ஜனாதிபதி ட்ரம்பின் உத்தரவு…அமெரிக்காவில் அதிகரிக்கும் சிசேரியன்

ஜனாதிபதி ட்ரம்பின் உத்தரவு…அமெரிக்காவில் அதிகரிக்கும் சிசேரியன்

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக கடந்த 20 ஆம் திகதி டெனால்ட் ட்ரம்ப் பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்றதிலிருந்து பல சட்டதிட்டங்களையும் உத்தரவுகளை பிறப்பித்து அதற்கான காலக்கெடுவையும் அறிவித்து வருகிறார்.

அந்த உத்தரவுகளில் ஒன்று தான். பெப்ரவரி 20ஆம் திகதிக்குப் பின்னர் அமெரிக்க குடிமக்கள் அல்லாத தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை கிடையாது என்பது.

இந்த உத்தரவின் பிரகாரம் குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் சிசேரியன் மூலமாக குழந்தைப் பெற்றுக்கொள்வதற்கு பல தம்பதிகள் மருத்துவமனையை நாடி வருகின்றனர்.

7, 8 மாதம் மற்றும் 9 மாதங்கள் கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் பலரும் மருத்துவர்களிடம் ஓடி அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றக்கொள்ள முயன்று வருகின்றனர்.

இது தொடர்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க மகப்பேறு மருத்துவர் கூறியதாவது, “ஜனாதிபதி ட்ரம்பின் உத்தரவுக்குப் பின்னர் அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டுப் பெண்கள் குறிப்பாக, இந்திய கர்ப்பிணிகள் உடனடியாக குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர்.

இது தொடர்பில் ஒரு நாளில் 20 கோரிக்கைகள் வரை வருகின்றன. அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்றாலும் இதனால் குழந்தையின் உடல் நிலை மோசமாகலாம். உதாரணமாக, குறைவான எடை, வளர்ச்சியடையாத நுரையீரல், நரம்பு மண்டல பாதிப்பு போன்ற பாதிப்பு ஏற்படலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

எனவே ஜனாதிபதி ட்ரம்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய வம்சாவளியினர் சார்ந்த சமூக நல அமைப்புகள், வழக்கு தொடர்ந்துள்ளன.

அதுமட்டுமின்றி அமெரிக்க குடியுரிமை இல்லாத பெற்றோர்களிடம் க்ரீன் அட்டை இல்லாவிட்டாலும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்காது என்பதால் க்ரீன் அட்டையைப் பெற்றுக்கொள்வதற்காகவும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.

Share This