ஜனாதிபதி தாயகம் திரும்பினார்

ஜனாதிபதி தாயகம் திரும்பினார்

ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இன்று (01) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அமெரிக்காவில் நடைபெற்ற 80 ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் கலந்துகொண்டதையடுத்து
ஜனாதிபதி ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது ஜனாதிபதியுடன் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் பல உயர் அரசாங்க அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.

அவர்கள் இன்று (01) காலை 09.30 மணிக்கு இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-403 மூலம் தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )