ட்ரம்பை சந்தித்த ஜனாதிபதி அநுர குமார

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையிலான சந்திப்பு அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த சந்திப்பு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வின் போது இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, உத்தியோகபூர்வ விஜயமாக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் அவர் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் கலந்து கொண்டுள்ளார்.
அதன்படி, இன்று (24) இலங்கை நேரப்படி நள்ளிரவு 12 மணியளவில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அவர் உரையாற்றவும் உள்ளார்.