ஜனாதிபதியும், நாமல் எம்பியும் ஒரே விமானத்தில் மாலைத்தீவுக்கு பயணம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவும் இன்று ஒரே விமானத்தில் மாலைத்தீவுக்கு பயணம் செய்துள்ளனர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று அரச முறை பயணமாக மாலைத்தீவு சென்றுள்ளார். அதே நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச திருமண விழாவில் கலந்து கொள்ள மாலைத்தீவு பயணமாகியுள்ளார்.
இந்நிலையில், இருவரும் கொழும்பிலிருந்து மாலைத்தீவுக்குச் செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL 101 இன் வணிக வகுப்பில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.