தபால்மூல வாக்களிப்பு – விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு

தபால்மூல வாக்களிப்பு – விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு

எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் தபால் வாக்குகளை அளிக்க விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால எல்லை எதிர்வரும் 17 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பல்வேறு கட்சிகளின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

தபால் வாக்குகளை அளிக்க விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால எல்லை  இன்று (12) நள்ளிரவு 12.00 மணிக்கு முடிவடையவிருந்த நிலையிலேயே கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது

விண்ணப்பதாரர்கள் தங்கள் முறையாக நிரப்பப்பட்ட படிவங்களை புதிய காலக்கெடுவிற்குள் மாவட்ட தேர்தல் அலுவலகம் மூலம் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share This