25 வருடங்களின் பின்னர் தமிழில் மீண்டும் பூவே உனக்காக சங்கீதா

பூவே உனக்காக திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் நடிகை சங்கீதா. தொடர்ந்து நம்ம ஊரு ராஜா, அம்மன் கோவில் வாசலிலே, இதயவாசல், தாலாட்டு போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
திருமணத்தின் பின்னர் நடிப்பிலிருந்து விலகிக்கொண்ட அவர், வேறு மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் சுமார் 25 வருட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளார்.
பரத் நடிப்பில் உருவாகிவரும் காளிதாஸ் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.