மகிந்தவின் வீட்டில் குவியும் அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள்

மகிந்தவின் வீட்டில் குவியும் அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள்

கொழும்பு விஜேராம வீதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு இன்று (11) காலை முதல் அரசியல்வாதிகள் மற்றும் இராஜதந்திரிகள் சென்று வருகின்றனர்.  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து இன்று வெளியேற உள்ளதாக வெளியான  செய்திகளை அடுத்து இவர்கள் இங்கு சென்றுள்ளனர்.

‘ஜனாதிபதிகள் உரிமைகள் (ரத்து செய்தல்) சட்டம்’ என்ற புதிய சட்டத்தின் விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகள் அரசு வழங்கிய உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் மீள வழங்க வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ நீண்டகாலமாக  உத்தியோகபூர்வ இல்லத்திலேயே வசித்து வருகிறார். ஆனால் நேற்று (10) நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் கீழ், அவருக்கு இனி அந்த உரிமை கிடைக்காது. அதனால் அவர் வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்துள்ளதாகவும் இன்று அவர் வெளியேறுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ள சூழலில் அரசியல்வாதிகளும் இராஜதந்திரிகளும் அவர் சந்தித்து நலம் விசாரித்து வருவதாக தெரியவருகிறது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )