பரிசு வென்றிருப்பதாக கூறி மோசடி – பொலிஸார் எச்சரிக்கை

வங்கி வெகுமதிகளை வழங்குவதாகக் கூறி சமூக ஊடகங்களில் ஒரு மோசடி செய்தி தற்போது பகிரப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் செய்தி மோசடியானதும் மிகவும் ஆபத்தானதுமான மோசடிச் செய்தி என்று பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டுகிறது.
இதன்மூலம் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதாகவும், கையடக்க தொலைபேசிகளின் மென்பொருளை மாற்றியமைப்பதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.
கணினி அவசரகால பதில் மன்றத்திற்கும் இது தொடர்பாக பல முறைப்பாடுகள் வந்துள்ளதாக அதன் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்தா தெரிவித்தார்.
கையடக்க தொலைபேசிகள் மூலம் வங்கிச் சேவை செய்பவர்கள் இதுபோன்ற போலிச் செய்திகளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.