செல்வராசா கஜேந்திரன் மற்றும் வேலன் சுவாமிகளுக்கு பொலிஸார் அழைப்பு

செல்வராசா கஜேந்திரன் மற்றும் வேலன் சுவாமிகளுக்கு பொலிஸார் அழைப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள் ஆகியோரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக பலாலி பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் திஸ்ஸ விகாரையை அகற்றக் கோரி நடத்திய போராட்டம் தொடர்பாக வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக பொலிஸார் அவர்கள் இருவரையும் அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, பலாலி பொலிஸ் நிலையத்தில் இன்று (20) நண்பகல் 12 மணிக்கு இருவரையும் ஆஜராகுமாறு பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Share This