மேலும் இரு இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

மேலும் இரு இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

துப்பாக்கிச் சூடு, கொலைகள் மற்றும் பணமோசடி தொடர்பாக இலங்கை பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த மேலும் இரண்டு சந்தேக நபர்கள் இன்று காலை இந்தியாவில் இருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

இரண்டு சந்தேக நபர்களும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்த நிலையில், சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.

அதன்படி, இரண்டு சந்தேக நபர்களும் அந்த நாட்டில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் ஹம்பாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த ரத்நாயக்க வீரகோன் அரோஷன் மதுசங்க என்ற 38 வயதுடைய நபராவார், மற்றவர் மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த எரங்க புஷ்பகுமார ஹெட்டியாராச்சி என்ற 37 வயதுடைய நபராவார்.

அதன்படி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக மாத்தறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Share This