பொலிஸார் தவறான இடங்களில் தன்னைத் தேடினர் – தேசபந்து

பொலிஸார் தவறான இடங்களில் தன்னைத் தேடினர் – தேசபந்து

பொலிஸார் தன்னைத் தேடி வந்த காலத்தில், கிரியுல்லவில் உள்ள தனது வீட்டிலேயே தங்கியிருந்ததாக, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார்.

நாடாளுமன்றக் குழுவில் தனக்கெதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் 11ஆவது நாளாக நேற்று விசாரணைக்கு முன்னிலையான போதே அவர் இதனை கூறினார்.

குழுவில் சாட்சியமளித்த தேசபந்து, வீட்டில் விளக்குகளை இயக்காமல் தனியாக வாழ்ந்ததாகவும், மின்சாரம் இன்மையால் மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

பொலிஸார் தவறான இடங்களில் தன்னைத் தேடியதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாத்தறை, வெலிகமவில் விருந்தகம் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அந்தக் குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Share This