கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து காணாமல் போன சிசுவின் சடலம் – பொலிஸார் தீவிர விசாரணை

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சிசு ஒன்றின் உடல் காணாமல் போயுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தெமட்டகொட பொலிஸ் பிரிவில் உள்ள மாளிகாவத்தை ரயில்வே முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் கழிப்பறையில் கடந்ம ஓகஸ்ட் முதலாம் திகதி சிசுவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து தெமட்டகொட பொலிஸார் விசாரணை நடத்தி, நீதவானின் உத்தரவின் பேரில், குழந்தையின் உடலை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைத்தனர்.
தெமட்டகொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் கடந்த மாதம் 29 மற்றும் 31ஆம் திகதிகளில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறைக்குச் சென்று பரிசோதனையை மேற்கொண்டனர்.
எனினும், சிசுவின் உடல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், சம்பவம் குறித்து மருதானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்