வாழைச்சேனையில் திருமணம் செய்யவிருந்த பெண்ணை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

வாழைச்சேனையில் திருமணம் செய்யவிருந்த பெண்ணை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனையில் திருமணம் செய்யவிருந்த பெண் ஒருவரை தாக்கிய ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவரை இன்று வியாழக்கிழமை (08) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் அம்பாறை மாவட்டத்தைச் சோந்த பொலிஸ் கான்ஸ்டபிள் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அவரை திருமணம் முடிப்பதற்காக இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடமையில் இருந்து விடுப்பில் வீடு சென்ற குறித்த பொலிஸ் கான்ஸ்டபில் சம்பவதினமான நேற்று திருமணம் முடிக்க இருந்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற நிலையில் அங்கு இருவருக்கும் இடையே வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த பெண் மீது பொலிஸ் கான்ஸ்டபிள் தாக்குதல் நடத்தியதுடன், காயமடைந்த பெண் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து பொலிஸாக்கு பெண் வழங்கிய முறைப்பாட்டையடுத்து குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை இன்று கைது செய்யப்பட்டார்.

கைது செய்தவரை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துவருவதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This