மூன்று போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி

மூன்று போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி

மும்பை கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவின் போது பிரதமர் நரேந்திர மோடி ஐ.என்.எஸ் சூரத், ஐ.என்.எஸ். நீலகிரி, ஐ.என்.எஸ் வாக்சீர் ஆகிய போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பாதுகாப்பில் உலகளாவிய தலைமையகமாக இருப்பதற்கான நாட்டின் முயற்சிகளை வலுப்படுத்தும் என்றும், தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்று அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி இந்த மூன்று போர்க் கப்பல்களை கடற்படையில் இணைப்பது ஒரு வரலாற்று நிகழ்வு என்று கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும் சோதனைகளுக்கு பின்னர் இக் கப்பல்கள் முழுமையான செயல்பாட்டு வந்துள்ளதாகவும் கடல்சார் வலிமையை அதிகரிக்க தயார் நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This