
தமிழகத்தில் பலத்த மழை – தரையிறங்க முடியாமல் வட்டமடிக்கும் விமானங்கள்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
தாம்பரம், விமானநிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த மழை காரணமாக விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 08 இண்டிகோ விமானங்கள் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
CATEGORIES இந்தியா
