பியூமி ஹன்சமாலியின் மகன் கைது

இராஜகிரிய – கலபலுவாவ பகுதியில் ஒருவரைத் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பியூமி ஹன்சமாலியின் மகன் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கார் விபத்துக்குப் பின்னர் மற்றொரு குழுவுடன் நடந்ததாகக் கூறப்படும் தாக்குதல் தொடர்பாக இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.