பாகிஸ்தான் இராணுவத் தளபதி இலங்கைக்கு விஜயம்

பாகிஸ்தான் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் எதிர்வரும் 21 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கைக்கான மூன்று நாள் பயணத்திற்குப் பின்னர், அவர் இந்தோனேசியாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..
பாகிஸ்தானின் உயர் அதிகாரியான ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், ஜனாதிபதி உட்பட முப்படைகளின் உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.