ஆபரேஷன் சிந்தூர்க்கு பதிலடி – ஆபரேஷன் பன்யன் மார்ஸை ஆரம்பித்துள்ள பாகிஸ்தான்

ஆபரேஷன் சிந்தூர்க்கு பதிலடி – ஆபரேஷன் பன்யன் மார்ஸை ஆரம்பித்துள்ள பாகிஸ்தான்

இந்தியா மூன்று பாகிஸ்தான் விமானப்படை தளங்களை இலக்கு வைத்ததையடுத்து இந்திய இராணுவ தளங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பதிலடி நடவடிக்கையை ‘ஆபரேஷன் பன்யன் மார்ஸ்’ என்று பெயரிட்டுள்ளது.

அண்மைய தாக்குதல்களைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை அதிகாலை முதல் பாகிஸ்தான் சிவில் விமான போக்குவரத்து தனது
வான்வெளியை மூடுவதாக அறிவித்துள்ளது.

இந்திய நிர்வாக காஷ்மீர் மற்றும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் முழுவதும் வெடிப்புகள் மற்றும் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்துள்ளன.

ஏனெனில் 26 இடங்களில் ட்ரோன்கள் காணப்பட்டதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஃபெரோஸ்பூர் நகரில் நடந்த ட்ரோன் தாக்குதலில் மூவர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா இலக்கு வைத்ததிலிருந்து
இதுவரை சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This