துப்புரவு செய்யப்படும் நெல் களஞ்சியசாலைகள்

துப்புரவு செய்யப்படும் நெல் களஞ்சியசாலைகள்

அரசாங்கத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் “க்ளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்துடன் இணைந்து பொதுமக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பல வருடங்களாக கைவிடப்பட்டிருந்த ஹிகுரக்கொட சதொச நெல் களஞ்சியசாலை வளாகத்தை புனரமைக்கும் பணியின் முதற்கட்டமாக, வளாகத்தை சுற்றி துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் நெல் கொள்வனவு திட்டத்திற்காக களஞ்சியசாலைகளை தயார்படுத்தும் நோக்கில் சதொசவின் புதிய தலைவர் கோசல வில்பாவவின் மேற்பார்வையின் கீழ், ஹிகுரக்கொட பிரதேச செயலகம், நெல் சந்தைப்படுத்தல் சபை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் பிற அரசு நிறுவனங்கள், விவசாய அமைப்புகள், கூட்டுறவு சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் உள்ளூர்வாசிகளின் பங்கேற்புடன் இந்த துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தவிர பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பத்மசிறி பண்டார மற்றும் சுனில் ரத்னசிறி ஆகியோரும் இதில் இணைந்து கொண்டனர்.

மேலும், இதன் அடுத்த கட்ட பணிகளை ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

Share This