செப்டெம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 75,000 இற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டெம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 75,000 இற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை

சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

செப்டெம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 75,358 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து மாத்திரம் 21,389 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்,

பிரித்தானியாவிலிருந்து 5,714 பேரும், ஜெர்மனியிலிருந்து 4,817 பேரும் வருகை தந்துள்ளனர்.

சீனாவிலிருந்து 4,056 சுற்றுலாப் பயணிகளும் பிரான்ஸிலிருந்து 3,834 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, 2025 ஆம் ஆண்டில் செப்டெம்பர் மாதத்தில் இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,641,881 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களுள் 346,984 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் 156,855 பேர் பிரித்தானியாவை சேர்ந்தவர்கள் ஆவர்.

மேலும் 120,314 பேர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Share This