‘விகடன்’ இணையத்தள முடக்கத்தை நீக்க உத்தரவு

‘விகடன்’ இணையத்தள முடக்கத்தை நீக்க உத்தரவு

விகடன் இணையத்தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து கேலிச்சித்திரம் ஒன்று வெளியிடப்பட்டதையடுத்து இதனை பா.ஜ.க ஆதரவாளர்கள் விமர்சித்ததோடு, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இது தொடர்பில் விகடன் நிறுவனத்துக்கு எதிராக மத்திய அரசுக்கு முறைப்பாடும் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் மத்திய அரசானது கடந்த மாதம் 15 ஆம் திகதி முடக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.

இதற்கு என்ன நடவடிக்கையானாலும் அதனை சட்டப்படி எதிர்கொள்வோம் என விகடன் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இவ்வாறிருக்க இவ் வழக்கு விசாரணை நீதிபதி பரதசக்ரவர்த்தி முன்னிலையில் நடைபெற்றது. அதில் விகடன் நிறுவனத்துக்கு ஆதரவாக பேசிய வழக்கறிஞர் இது ஊடக சுதந்திரத்தை பறிக்கும் செயல் எனவும் இந்திய இறையாண்மைக்கு எதிரானது எனவும் வாதிட்டார்.

வழக்கை முழுவதுமாக விசாரித்த நீதிபதி விகடன் இணையத்தள முடக்கத்தை நீக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டதோடு, குறித்த கேலிச் சித்திரத்தை ப்ளொக் செய்யுமாறும் விகடன் நிறுவனத்துக்கு அறிவுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This