பேரிடர் நிலைமை தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராக  குற்றவியல் வழக்கு

பேரிடர் நிலைமை தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராக  குற்றவியல் வழக்கு

இலங்கையில் தற்போதைய பேரிடர் நிலைமை தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராக  குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் S.M. மரிக்கார் ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் கூறியுள்ளார்.

இந்த பேரிடர் நிலைமை 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைப் போலவே தீவிரமான சம்பவம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷக்கள் நாட்டை திவாலாக்கியதற்காக தாக்கல் செய்யப்பட்ட குற்றவியல் வழக்கைப் போலவே, தற்போதைய அரசாங்கத்திற்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்வோம் என அவர் கூறியுள்ளார்.

பேரிடரில் இறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் அவர்கள் பொறுப்பு, என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

பேரிடர்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கைகள் வழங்கப்பட்ட போதிலும், அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் S.M. மரிக்கார் மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )