பதவி விலக தயாராகும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் – சஜித் வெளியிட்ட அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த தியாகங்களைச் செய்து மாகாண சபைத் தேர்தலில் கட்சியை வெற்றி பெறச் செய்ய அவர்கள் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஆளும் தரப்பு உறுப்பினர்கள் இதற்கு முன்பு இதுபோன்ற செயல்களைச் செய்திருந்தாலும், எதிர்க்கட்சியிலிருந்து இதுபோன்ற ஒன்று நடப்பது அரிதான விடயம் என்றும் குறிப்பிட்டார்.
2020 பெப்ரவரி மாதம் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தொலைபேசி சின்னத்தின் கீழ் இதுவரை இரண்டு பொதுத் தேர்தல்களிலும், ஒரு ஜனாதிபதித் தேர்தலிலும் உள்ளூராட்சித் மன்றத் தேர்தலொன்றிலும் போட்டியிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு 1773 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் காணப்படுகின்றனர்.
இவர்களில் 714 பேர் பெண்கள் ஆவர். கட்சியின் ஆரம்பம் தொட்டு, அன்றிலிருந்து இவர்கள் செய்த நன்கொடைகள் மற்றும் தியாகங்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இலங்கையில் இரண்டாவது கூடிய எண்ணிக்கையிலான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சக்தியே கொண்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.