பட்ஜெட்டை ஆதரித்து வாக்களித்த எதிர்க்கட்சி எம்.பி காதர் மஸ்தான் – காரணம் என்ன?

பட்ஜெட்டை ஆதரித்து வாக்களித்த எதிர்க்கட்சி எம்.பி காதர் மஸ்தான் – காரணம் என்ன?

இலங்கை தொழிலாளர் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின் வாக்கெடுப்பில் ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 45 வாக்குகளும் அளிக்கப்பட்டு 114 வாக்குகள் பெரும்பான்மையுடன் வரவு – செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.

தனது தீர்மானம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், மக்களின் அபிலாஷைகளின் அடிப்படையில் தான் வாக்களித்ததாக குறிப்பிட்டார்.

“இந்த வரவு செலவுத் திட்டம் அரசாங்கத்தின் தூரநோக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மேலும் தேசிய முன்னேற்றத்திற்கான எதிர்பார்ப்புகளுடன் மக்கள் அவர்களை அதிகாரத்திற்குத் தேர்ந்தெடுத்துள்ளனர். மக்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களுடன் எனது நடவடிக்கைகளை நான் சீரமைக்கிறேன். அதனால்தான் நான் பட்ஜெட்டை ஆதரித்தேன்” எனக் கூறியுள்ளார்.

அரசாங்கம் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறதா என்பதை நாம் அவதானிக்க வேண்டும். மக்கள் வழங்கிய ஆணையை எதிர்ப்பதை விட, அவர்களுக்கு ஆதரவளிப்பதே நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Share This