பேலியகொடையில் ஆயுத தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி

பேலியகொடை, வெதமுல்ல பகுதியில் ஆயுத தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார்
பேலியகொடை பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (19) மாலை கிடைக்கப்பெற்ற முறைபாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவருக்கும், மற்றும் ஒரு நபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறிய நிலையில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் களனி, வெதமுல்ல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பேலியகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.