
திருகோணமலையில் மோட்டார் சைக்கிளொன்று விபத்துக்குள்ளனாதில் ஒருவர் பலி
திருகோணமலை – குச்சவௌி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நிலாவௌியிலிருந்து இறக்கக்கண்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன்
மோதி இன்று(16) அதிகாலை விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்தில் இறக்கக்கண்டி பகுதியைச் சேர்ந்த 44 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
சடலம் நிலாவௌி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் குச்சவௌி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
CATEGORIES இலங்கை
