யாழ் கொல்லங்கலட்டியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

யாழ்ப்பாணம் கொல்லங்கலட்டியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனது விவசாய நிலத்தில் பன்றிகளால் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், அதற்காக அமைக்கப்பட்ட மின்சார வேலியின் மின்சாரத்தால் தாக்கப்பட்டு 64 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர், கிளானை கொல்லங்கலட்டியை சேர்ந்த குடும்பஸ்தர் என தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காங்கேசந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.