பத்து இலட்சம் இளைஞர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்படவில்லை

முதல் தடவையாக தேசிய அடையாள அட்டையை எதிர்பார்த்து காத்திருக்கும் சுமார் 10 இலட்சம் இளைஞர்களுக்கு இன்னும் அடையாள அட்டைகள் கிடைக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
மூன்று வருடங்களாக ஒரு துண்டு காகிதத்தை மட்டுமே தேசிய அடையாள அட்டையாக பயன்படுத்தி வரும் இந்த இளைஞர்களிடம், அச்சிடப்பட்ட அடையாள அட்டைக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணமும் வசூலிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான தேசிய அடையாள அட்டையை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் வழங்க முடியாத சூழல் எழுந்துள்ளதால் டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பில் பல விவாதங்கள் எழுந்து வருகின்றன.
இந்த அடையாள அட்டை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்றாலும், 2022 முதல் அவர்களுக்கு காகித அட்டையொன்று மட்டுமே வழங்கப்படுகிறது.