இஸ்ரேலில் கத்திக்குத்து தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு

இஸ்ரேலிய நகரமான ஹைஃபாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒருவர் இறந்துவிட்டதாகவும், மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 70 வயதுடைய ஒருவரின் மரணத்தை வைத்தியர்கள் மற்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் காயமடைந்த நான்கு பேருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர் கொல்லப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.