கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளுடன் இணைந்து இன்று யாழ். பலாலி அந்தோணிபுரம் கடற்கரை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, மாமுனை, சாம்பியன் பற்று பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
இந்தியாவிலிருந்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு விற்பனைக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 35 மில்லியன் ரூபா பெறுமதியான 111.975 கிலோகிராம் கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பலாலி பொலிஸ் நிலையத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது.