கிளிநொச்சியில் மலேரியா காய்ச்சலுடன் ஒருவர் அனுமதி

கிளிநொச்சியில் மலேரியா காய்ச்சலுடன் ஒருவர் அனுமதி

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மலேரியா நோயுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு வைத்தியர் தெரிவித்துள்ளார்.

தொற்று ஏற்பட்ட நபர் ஆபிரிக்க நாடான கானாவிலிருந்து வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காய்ச்சல் ஒட்டுண்ணிகளால் ஏற்படுவதுடன்  பாதிக்கப்பட்ட பெண் அனோபிலிஸ் கொசுக்கள் கடித்தால் மக்களுக்கு பரவுகிறது.

மலேரியாவின் அறிகுறிகள் பொதுவாக 10-15 நாட்கள் கொசு கடித்த பிறகு தோன்றும்.  அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி  போன்றன ஏற்படும் .

Share This