செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பழைமையான கடற்கரை

பூமியைத் தவிர ஏனைய கிரகங்களில் மனிதர்கள் வாழக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என்பது குறித்த பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
அதன்படி, பூமிக்கு அடுத்தபடியாக இருப்பது செவ்வாய். இக் கிரகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நாசா ஆய்வு மேற்கொண்டது. அதில் 30 கோடி வருடங்களுக்கு முற்பட்ட பண்டைய கரிமப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அடுத்ததாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் நடத்திய ஆய்வில் செவ்வாய் கிரகத்தில் பூமத்திய ரேகைக்கு அடிப் பகுதியில் தூசி நிறைந்த பனிக்கட்டிகள் இருப்பதை கண்டுபிடித்தது.
இவ்வாறிருக்க சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் அங்கு 300 கோடி வருடங்கள் பழைமையான கடற்கரை படிமங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
கடற்கரை படிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டமையானது, தண்ணீர் இருப்பதை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் மேலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.