ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை – விராட் கோலி முன்னேற்றம்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை – விராட் கோலி முன்னேற்றம்

ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவை துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை புதுப்பித்துள்ளது. இதில் விராட் கோலி முதல் ஐந்து இடங்களுக்குள் மீண்டும் முன்னேறியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடந்த ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான் போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய கோலி, ஒருநாள் போட்டியில் தனது 51வது சதத்தை பூர்த்தி செய்திருந்தார்.

இந்நிலையிலேயே, ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்காக சமீபத்திய தரவரிசையில் 743 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி ஐந்தாவது இடத்திற்குத் கோலி முன்னேறியுள்ளார்.

மேலும், புதிய தரவரிசை பட்டியலின் முதல் 10 இடங்களில் 4 இந்திய வீரர்கள் உள்ளனர்.

சுப்மன் கில் 817 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், 770 புள்ளிகளுடன் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் இரண்டாது இடத்திலும், 757 புள்ளிகளுடன் ரோஹித் ஷர்மா மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

749 புள்ளிகளுடன் தென்னாபிரிக்க வீரர் ஹென்ரிச் க்ளாஸன் நான்காவது இடத்திலும், 679 புள்ளிகளுடன் ஷ்ரேயஸ் ஐயர் ஒன்பதாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This