
அமெரிக்காவின் புதிய வரிகளால் பிரித்தானியா மந்தநிலையில் தள்ளப்படும் – பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை
கிரீன்லாந்தை பாதுகாக்க விரும்பும் நாடுகளின் இறக்குமதிகள் மீது அமெரிக்கா புதிய வரிகளை விதித்தால் பிரித்தானியா மந்தநிலையில் தள்ளப்படும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
பெப்ரவரி முதலாம் திகதி முதல் இங்கிலாந்து, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, நோர்வே மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பொருட்களுக்கு 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஜூன் மாதத்தில் இந்த வரி 25 சதவீதமாக உயரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
கேபிடல் எகனாமிக்ஸ் அறிக்கையின்படி, அத்தகைய நடவடிக்கை இங்கிலாந்து பொருளாதாரத்தை 0.75 சதவீதம் வரை துடைக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார் தயாரிப்பு மற்றும் மருந்துத் துறைக்கு சிக்கலை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இங்கிலாந்து பொருளாதாரம் தற்போது ஒரு காலாண்டில் 0.2 சதவீதம் முதல் 0.3 சதவீதம் வரை வளர்ந்து வருகின்றது.
எனினும், இந்தத் தாக்கம் ஒரே நேரத்தில் ஏற்பட்டால் அது இங்கிலாந்தில் மந்தநிலையைத் தூண்டக்கூடும்” என்று கேபிடல் எகனாமிக்ஸின் பொருளாதார நிபுணர் பால் டேல்ஸ் எச்சரித்தார்.
இருப்பினும், நீண்டகால அரசியல் மற்றும் புவிசார் அரசியல் விளைவுகள் மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறியினும், ஆண்டும் அடுத்த ஆண்டும் வளர்ச்சியின் அடிப்படையில் இங்கிலாந்து பொருளாதாரம் அமெரிக்கா மற்றும் கனடாவை விட பின்தங்கியிருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
