தோல் புற்றுநோயைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பம்
![தோல் புற்றுநோயைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பம் தோல் புற்றுநோயைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பம்](https://oruvan.com/wp-content/uploads/2025/02/colon-cancer-2000x900-1.jpg)
தோல் புற்றுநோய் என்பது தற்போது பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதன்படி, தோல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் வகையிலான செயற்கை புலனறிவு தொழில்நுட்பத்தை பிரிட்டன் நிறுவனமொன்று கண்டுபிடித்டதுள்ளது.
உலகளாவிய ரீதியில் சுமார் 40 சதவீதமானோர் இந்த தோல் புற்றுநோய்க்கு ஆளாகியுள்ளனர்.
அதன்படி டெர்ம் எனப்படும் இத் தொழில்நுட்பத்துக்கு பிரிட்டன் மருத்துவ ஒழுங்குமுறை ஆணைக்குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.
முதலில் உங்கள் ஸ்மார்ட்போன்களில் இந்த டெர்ம் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின் ஸ்மார்ட்போனில் டெர்மாஸ்கோப் என்ற படம் பிடிக்கும் கருவியை பொருத்த வேண்டும்.
இக் கருவியின் மூலம் நோயாளியின் தோல் பகுதி மட்டும் படம் பிடிக்கப்படும்.
அந்தப் படத்துடன் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களை ஒப்பிட்டுப் பார்த்து தோல் புற்றுநோய் பாதிப்பு இருக்கிறதாக என்பதை செயலி உறுதிப்படுத்தும்.
இந்த செயலி 99.8 சதவீதம் தோல் புற்றுநோயை துல்லியமாக கணிப்பதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.