‘தேசிய மகளிர் வாரம்’ அறிவிக்கப்பட்டது

‘தேசிய மகளிர் வாரம்’ அறிவிக்கப்பட்டது

எதிர்வரும் மார்ச் எட்டாம் திகதி வரும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் ‘தேசிய மகளிர் வாரம்’ ஒன்றை அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு மகளிர் தினத்திற்கான தேசிய கருப்பொருள் ‘வலிமையான அவள்: நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான பாதை’ ஆகும்.

மார்ச் 2 முதல் மார்ச் 8 வரை, பெண்களின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை ஆதரிப்பதற்காக, அவர்களின் சுகாதாரம், விழிப்புணர்வு, பாதுகாப்பு, அதிகாரமளித்தல் மற்றும் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டை மையமாகக் கொண்ட நாடு தழுவிய திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.

பெண் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்கும் அவர்களின் தயாரிப்புகளுக்கு சந்தையை வழங்குவதற்கும், ‘லிய சக்தி’ மகளிர் கண்காட்சி மார்ச் 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் நடைபெறும்.

நிகழ்வின் வெற்றியை உறுதி செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு மகளிர் தின கொண்டாட்டம், பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில், மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் சரோஜா சாவித்திரி பவுல்ராஜ் மற்றும் பிரதி அமைச்சர் நாமல் சுதர்சன ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெறவுள்ளன.

இந்த நிகழ்வு பத்தரமுல்லையில் உள்ள ‘சுஹுருபாய’ கேட்போர் கூடத்தில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This