அரசாங்கத்திற்கு சவாலாக மாறியுள்ள நாமல்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கதிற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச பெரும் சவாலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்டப் பிரிவு அமைப்பாளர்களை நியமிக்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு எங்கள் கட்சியும் நாமல் ராஜபக்சவும் முக்கிய சவாலாக மாறியுள்ளனர். நாமல் ராஜபக்ச அடுத்த ஜனாதிபதியாக வருவார் என்று அனைவரும் கூறுகின்றனர்.
எல்லோரும் அதைப் பற்றித்தான் பேசுகிறார்கள். இதனால், நாமல் ராஜபக்சவிற்கு எதிராக அவதூறுகள் பரப்பப்படுகின்றன. அரசாங்க தரப்பினர் பயத்தில் இதையெல்லாம் செய்கிறார்கள்.
மொட்டு கட்சியின் கொடிக்கும் அவர்கள் பயப்படுகிறார்கள். அந்த பயம் நல்லது. அந்த பயத்தை தக்க வைக்க வேண்டும். அதுவே நமக்கு இப்போது தெவையாக இருக்கின்றது.
மொட்டுக் கட்சி அடுத்ததாக ஆட்சியைப் பிடிக்கப் போகின்றது என்பது அனைவருக்கும் தெரியும் என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.