நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை ஆரம்பம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ளன.

10ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா எதிர்வரும் 7ஆம் திகதியும், 22ஆம் திருவிழாவான மாம்பழத் திருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் 19ஆம் திகதியும் நடைபெறும்.

அத்துடன் 24ஆம் திருவிழாவான தேர்த் திருவிழா ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி காலையும், மறுநாள் 22ஆம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் நடைபெற்று, மாலை கொடியிறக்கத்துடன் மகோற்சவம் நிறைவு பெறும்.

CATEGORIES
TAGS
Share This