நல்லூர் கந்தசுவாமி கோவில் உற்சவம் – யாழ். மாநகர சபையினருக்கு பெருவிழா பட்டோலை கையளிப்பு

நல்லூர் கந்தசுவாமி கோவில் உற்சவம் – யாழ். மாநகர சபையினருக்கு பெருவிழா பட்டோலை கையளிப்பு

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஜீலை 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளன.

இந்நிலையில், நல்லூர் கந்தன் பெருவிழாவுக்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல், வீதி தடைகள் அமைத்து சீரான போக்குவரத்துக்கு வழிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் யாழ். மாநகர சபையினருக்கு ஆலய சம்பிரதாய முறைப்படி இன்றைய தினம் (27) பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சி ஆலய கணக்குபிள்ளையால் கையளிக்கப்பட்டது.

இந்த வைபவத்தின் போது பாரம்பரிய முறைப்படி யாழ். மாநகர சபை வளாகத்தில் தோரணங்கள் கட்டி அலங்காரங்கள் அமையப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This