தமிழகம் – யாழ்ப்பாணம் கப்பல் சேவை!!! கட்டணம் குறைப்பு

தமிழகம் – யாழ்ப்பாணம் கப்பல் சேவை!!! கட்டணம் குறைப்பு

தமிழகம் நாகப்பட்டினம் மற்றும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு இடையிலான கப்பல் சேவை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் சேவையை முன்னெடுத்துள்ள சுபம் நிறுவனத்தின் தலைவர் சுந்தர்ராஜன் இதனை தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் சிவகங்கை கப்பல் சேவை இயக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், அதில் கோடை விடுமுறை முன்னிட்டு பயணிகளை கவரும் விதமாக தற்போது 8,500 ரூபாயாக உள்ள சென்று வருவதற்கான கட்டணம் 8000 ரூபாவாக குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

மேலும் தற்பொழுது 10 கிலோ வரை அனுமதிக்கப்படும் இலவச லக்கேஜ் இனி 22 கிலோ வரை அனுமதிக்கப்படும் என்றும் அதில் 7 கிலோ கைப்பையும், 15 ஒரு கிலோ லக்கேஜ் இலவசமாக அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் ஜூன் முதல் வாரத்தில் 250 பேர் பயணிக்க கூடிய கப்பல் இயக்கப்பட உள்ளதாகவும், கார்கோ கப்பல் இயக்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக கப்பல் நிறுவனத் தலைவர் சுந்தர்ராஜன் மேலும் தெரிவித்தார்.

Share This