மியான்மர் நிலநடுக்கம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1644ஆக அதிகரிப்பு

மியான்மர் நிலநடுக்கம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1644ஆக அதிகரிப்பு

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,644 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 10 பேர் தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மீட்பு நடவடிக்கையில் சீன மீட்புக் குழுவும் இணைந்துள்ளது.

இதற்கிடையில், மியான்மரில் உள்ள மண்டலே சர்வதேச விமான நிலையத்தை தற்காலிக மருத்துவமனையாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இந்தியாவும் பிரித்தானியாவும் மியான்மருக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, இந்தியாவில் இருந்து 60 தொன் நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் இரண்டு விமானங்கள் மியான்மருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், பிரித்தானியா 10 மில்லியன் பவுண்டுகள் உதவி வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், மியான்மரில் ஆட்சிக் கவிழ்ப்பு எதிர்ப்புப் போராளிகள் இரண்டு வார போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

நிலநடுக்கத்திற்குப் பிறகு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில் அவர்கள் போர் நிறுத்தத்தை அமல்படுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 28ஆம் திகதி, மியான்மரில் உள்ள சகாயிங் நகருக்கு அருகில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This