முல்லைத்தீவு மாணவன் சுகயீனத்தால் உயிரிழப்பு

முல்லைத்தீவு மாணவன் சுகயீனத்தால் உயிரிழப்பு

உயர்தர தொழிநுட்ப துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற முல்லைத்தீவு மாணவன் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு கற்சிலைமடுவைச்சேர்ந்த செல்வன் பாணுசன் என்பவர் கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.

சிறுநீரக மாற்று சிகிச்சை பயனளிக்காமல் நேற்றையதினம் (29.09.2025) இரவு மரணமாகியமை முல்லைத்தீவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளார்.

உயர்தர தொழிநுட்ப துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற இம்மாணவன், குடும்பத்திற்கு ஒரேயொரு பிள்ளை என்பது மேலும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

CATEGORIES
TAGS
Share This