காதல் விவகாரங்களை பேசி இளங்குமரன், அர்ச்சுனா எம்.பிகள் வாக்குவாதம் – கூட்டத்தை விட்டு வெளியேறிய சிறீதரன் எம்.பி

காதல் விவகாரங்களை பேசி இளங்குமரன், அர்ச்சுனா எம்.பிகள் வாக்குவாதம் – கூட்டத்தை விட்டு வெளியேறிய சிறீதரன் எம்.பி

தனிப்பட்ட அரசியல் விவகாரங்கள் மற்றும் தனிநபர் அவதூறுகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு இல்லைமையை சுட்டிக்காட்டி கூட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வெளியேறினார்.

யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தனிப்பட்ட விடையத்தை முன்னிறுத்தி இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்படதால் சில நிமிடங்கள் அமளிதுமளி ஏற்பட்டது.

வலி வடக்கில் முன்னெடுக்கப்படும் மின் இணைப்பு விடையம் தொடர்பில் விவாதம் முன்வைக்கப்பட்டபோது ஆளும் தரப்பு நாடளுமன்ற உறுப்பினரான இளங்குமரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அவர்களது தனிப்பட விடையங்களை முன்னிறுத்தியதாக மாறியது.

குறிப்பாக இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றவரது காதல் விடையங்கள், மோசடி மற்றும் பெண்களை ஏமாற்றிய கதைகள், நிதி மோசடிகள் உள்ளிட்ட பல விடையங்களை முன்னிறுத்தி நூற்றுக்கணக்கான அதிகாரிகள் முன்னிலையில் சண்டையிட்டனர்.

இந்நிலையில் குறித்த விவாதத்தை இடை நிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஒருங்கிணைப்பு குழு தலைவரிடம் வலியுறுத்தினார்.
ஆனால் ஒருங்கிணைப்பு குழு தலைவர் குறித்த இருவரையும் கட்டுப்படுத்த முடியாது ஆழுமையற்றவராக காணப்பட்டார்.

ஒருங்கிணைப்பு குழு தலைவரின் ஆழுமையற்ற நிலையை அவதானித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூட்டத்தை விடு வெளியேறி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )