தேசபந்துவை பதவி விலக்கும் பிரேரணை நாடாளுமன்றில் இன்று விவாதம்

தேசபந்துவை பதவி விலக்கும் பிரேரணை நாடாளுமன்றில் இன்று விவாதம்

பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து தேசபந்து தென்னகோனை நீக்கும் பிரேரணை இன்று (05) நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

நாடாளுமன்றம் இன்று காலை 9.30க்கு கூடவுள்ளதுடன், அது தொடர்பான விவாதம் காலை 11.30  முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.

இந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு மாலை 4 மணிக்கு நடைபெறும் என்றும், ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வாக்கெடுப்பில் பங்கேற்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் நாடாளுமன்றச் செயலகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களில் 113 உறுப்பினர்கள் வாக்களித்தால் இந்தப் பிரேரணையை நிறைவேற்ற முடியும்.

சபாநாயகர் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக அறிவித்த பின்னர், பொலிஸ்மா அதிபர் பதவிக்கான பெயரை அரசியலமைப்புச் சபைக்கு ஜனாதிபதி பரிந்துரைக்க உள்ளார்.

இதே நேரத்தில், இலங்கை மின்சாரத் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நாளை (06) நடைபெற உள்ளது. மேலும், புகையிலை வரிச் சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக நாடாளுமன்றச் செயலகம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )