காசா மீது இஸ்ரேல் தொடர் குண்டுத் தாக்குதல்
காசா மீது இஸ்ரேல் தொடர் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 24 மணித்தியாலங்களில் 31 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன் 57 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக
சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காஸாவில் உயிர் பிழைத்தவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் தோல்வியடையும் நிலையில் உள்ளதாக
ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரணத் தலைவர் டாம் பிளெட்சர் தெரிவித்துள்ளார்.
உதவிப் பணியாளர்கள் மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள்,உலக உணவுத் திட்டத்தின் வாகனத் தொடரணி
மீதான தாக்குதல் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளமை போன்றவற்றை மேற்கோள்காட்டி அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்- ஹமாஸ் மோதல் தீவிரமடைந்ததிலிருந்து இதுவரை 45,885 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன்
109,196 பேர் காயம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.